×

லட்டு விவகாரம்: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி

சென்னை: லட்டு விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டார். லட்டு விவகாரத்தில் தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேச பெருமாளின் பக்தன் என்ற முறையில் நம் மரபுகளை கடைபிடிக்கிறேன் என நடிகர் கார்த்தி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மெய்யழகன் பட நிகழ்ச்சியில் லட்டு குறித்து கேள்விக்கு, லட்டு குறித்து இப்போது பேச வேண்டாம்; அது sensitive topic என்று கார்த்தி சிரித்தபடி கூறியிருந்தார். சனாதனத்தில் ஜோக் செய்ய வேண்டாம் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சித்திருந்தார்.

The post லட்டு விவகாரம்: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி appeared first on Dinakaran.

Tags : Karthi ,Pawan Kalyan ,Chennai ,Andhra Pradesh ,Deputy Chief Minister ,Venkatesa Perumal ,Actor ,
× RELATED அரசு திட்டத்தில் முறைகேடு நடந்தால்...