×

சென்னை மாநகராட்சி ஆணையரின் மாமனார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் மாமனார் உமாசங்கர் மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் மாமனார் உமாசங்கர் (68) உடல் நலக்குறைவால் நேற்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குமரகுருபரனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.

The post சென்னை மாநகராட்சி ஆணையரின் மாமனார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Commissioner ,Chief MLA K. Stalin ,Mamanar Umasankar ,Chief Mu. K. Stalin ,Chennai Municipal Commissioner ,Kumaragurubaran ,Umasankar ,Chennai Municipal ,Commissioner ,Dinakaran ,
× RELATED கடலூர் மாநகராட்சி பகுதியில் காலி...