- நெல்லிக்குப்பம்
- காசிநாதன்
- பத்திரக்கோட்டை
- ஆராய்ச்சி குப்பம்
- சுப்பிரமணியன்
- வீரப்பன்
- திருமுருகன்
- சுப்பிரமணி
நெல்லிக்குப்பம், செப். 24: நெல்லிக்குப்பம் அடுத்த பத்திரக்கோட்டை ஆராய்ச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் சுப்பிரமணியன் (57). இவரது சகோதரர்கள் வீரப்பன், திருமுருகன். மூன்று பேரும் குடும்பத்துடன் பொதுவான வீட்டில் வசித்து வந்தனர். பின்னர் சுப்பிரமணி தம்பிகளான வீரப்பனுக்கும், திருமுருகனுக்கு வீட்டில் சமபங்கிற்கான தொகையை கொடுத்து விடுவதாக கூறி 2001ல் வீட்டை சுப்பிரமணி தனது பெயரில் மாற்றிக்கொண்டார். வீரப்பனும், திருமுருகனும் பணம் கேட்கும்போது காலம் கடத்தி வந்தார். இதனால் சுப்பிரமணிக்கும், வீரப்பனுக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி தனது ஆதரவாளர்களான ஆனந்தன், பாண்டியன், மணிகண்டன், சிவக்கொழுந்து உள்ளிட்ட 6 பேருடன் சேர்ந்து கடந்த 2022 ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி வீரப்பனை முந்திரி தோப்புக்கு அழைத்துச் சென்று கொலை செய்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை தேடி வந்த நிலையில் 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். சுப்பிரமணி, ஆனந்தன் தலைமறைவாகிவிட்டனர். 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு சுப்பிரமணி புதுச்சத்திரம் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், நடுவீரப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் சத்திரம் பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சத்திரம் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த சுப்பிரமணியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
The post சகோதரனை கொலை செய்து 22 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் அதிரடி கைது appeared first on Dinakaran.