×

பரமக்குடி பகுதியில் எம்பி நவாஸ்கனி நன்றி தெரிவிப்பு

பரமக்குடி,செப்.24: ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ்கனி எம்பி, பரமக்குடி பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு நவாஸ்கனி எம்பி வெற்றி பெற்றார்.

இவர், நேற்று பரமக்குடி நகர் பகுதிகளான கிருஷ்ணா தியேட்டர், 5 முனைச் சாலை, ஓட்ட பாலம், ஆற்று பாலம், எமனேஸ்வரம் ஒரு லிட்டர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது எம்எல்ஏக்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்,முருகேசன், முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் வேலுச்சாமி, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணை தலைவர் குணா மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post பரமக்குடி பகுதியில் எம்பி நவாஸ்கனி நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Navaskani ,Paramakudi ,Dimuka Coalition Party ,Ramanathapuram ,Ramanathapuram Parliament ,Dimuka Alliance ,Union of India Muslim League ,Dinakaran ,
× RELATED முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!