×

அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு கர்நாடக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: ஜனாதிபதியிடம் வலியுறுத்த சித்தராமையா அரசு முடிவு


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். இந்தநிலையில், ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை ஆளும் கட்சி தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. ஆளுநருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்துவது , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை வாபஸ்பெற கோரி ஜனாதிபதியை நேரில் சந்தித்து மனு கொடுப்பது மற்றும் ஆளுநருக்கு எதிராக அமைச்சர்கள் மவுன போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

The post அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு கர்நாடக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: ஜனாதிபதியிடம் வலியுறுத்த சித்தராமையா அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Sidharamaya government ,Bengaluru ,Governor ,Davarshand Kelat ,Congress government ,Chief Minister ,Sidharamaiah ,Delhi ,Siddaramaiah Government ,Dinakaran ,
× RELATED கமலா ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு