×

உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுக்காமல் தகராறு; குமரி அதிமுக நிர்வாகியை நிர்வாணமாக்கி தாக்கிய பெண்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்


நாகர்கோவில்: குமரி மாவட்ட அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி, நாகர்கோவில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும், கேரளாவை சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணை அடிக்கடி கேரளாவில் இருந்து அழைத்து வந்து, சில நாட்கள் யாருக்கும் தெரியாமல் பந்தல் பொருட்கள் உள்ள குடோனில் தங்க வைப்பார். பின்னர் அந்த பெண்ணுடன் ஜாலியாக இருந்து பணம் கொடுத்து அனுப்பி வைப்பது வழக்கம். சமீபத்தில் அந்த நிர்வாகி, பெண்ணை அழைத்து வந்துள்ளார். வழக்கம் போல் தங்க வைத்து ஜாலியாக இருந்துள்ளார். ஆனால் இந்த முறை பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அந்த நிர்வாகி, தனது நண்பர்கள் சிலருடனும் உல்லாசமாக இருக்குமாறு பெண்ணை வற்புறுத்தி உள்ளார். அந்த நண்பர்களும் அரசியல் கட்சியில் உள்ளனர் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் அதிமுக நிர்வாகி அந்த பெண்ணை தாக்கி உள்ளார். ஆத்திரம் அடைந்த பெண், என்னையே நீ அடிக்கிறீயா? என கேட்டு அந்த நிர்வாகியை சரமாரியாக அடித்து, சட்டை, லுங்கியை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்கினார். அடி தாங்க முடியாமல் அந்த நிர்வாகி வீட்டுக்குள் ஓடியுள்ளார். இந்த காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

The post உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுக்காமல் தகராறு; குமரி அதிமுக நிர்வாகியை நிர்வாணமாக்கி தாக்கிய பெண்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kumari ,AIADMK ,Nagercoil ,Kumari district ,Kerala ,Kumari AIADMK ,Dinakaran ,
× RELATED கற்கால மனிதர்கள் கற்கருவிகளை கூர்...