×

பளு தூக்கும் போட்டியில் சாதனை புதுப்பாளையம் வன அலுவலர்

கலசபாக்கம், செப்.24: புதுப்பாளையம் வன அலுவலர் சரவணன், சரக அளவிலான பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்தார். கோவை நகரில் வனத்துறை சார்பில் கடந்த 19, 20ம் தேதிகளில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் வேலூர் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் வன அலுவலராக பணிபுரியும் சரவணன் பளு தூக்கும் மற்றும் மற்றும் வலு தூக்கும் போட்டிகளில் பங்கேற்றார். இதில், ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார். இப்போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அளவில் சண்டிகர் மாநிலத்தில் வரும் 19ம் தேதி நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகி உள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்ற வன அலுவலர் சரவணனுக்கு, சக வனத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

The post பளு தூக்கும் போட்டியில் சாதனை புதுப்பாளையம் வன அலுவலர் appeared first on Dinakaran.

Tags : Pudupalayam ,Kalasapakkam ,Forest Officer ,Saravanan ,Coimbatore ,Forest Department ,Vellore ,Vellore Saragam ,
× RELATED கோபி தலைமை அஞ்சலகத்துடன் கிளை தபால்...