×
Saravana Stores

ஹஜ் பயணம் விண்ணப்பிக்க 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: பிரசிடெண்ட் அபூபக்கர் தகவல்

சென்னை: ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான கடைசி தேதி வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை டெல்லியில் உள்ள இந்திய ஹச் அசோசியேசன் சார்பில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் தகுதியான நபர்கள், வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

The post ஹஜ் பயணம் விண்ணப்பிக்க 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: பிரசிடெண்ட் அபூபக்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : President ,Abubakar ,Chennai ,Hajj Association of India (Hajj ,Hajj ,India ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு பயிர்க்கடன்களை...