×

பழனி கிரிவலப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் அகற்றம்


சென்னை: பழனி கிரிவலப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் பதில் அளித்துள்ளது. ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளனர். பழனி கோயிலுக்கு சொந்தமான இடங்கள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. வணிகரீதியாக கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் விளக்கத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

The post பழனி கிரிவலப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Palani Kriwalap Path ,CHENNAI ,Court ,Palani Temple ,Kriwala Path ,Palani Kriwala Path ,Dinakaran ,
× RELATED சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி...