- தமிழ்நாடு அரசு
- கிண்டி ரேஸ் கிளப்
- தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சென்னை கிண்டி ரேஸ் கிளப் கம்பனி
- வெங்கடபுரம்
- ஆதியாரு
- வேலச்சேரி
- தின மலர்
சென்னை: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்குவது பற்றி தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்துக்கு வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 160.86 ஏக்கர் நிலம் கடந்த 1945 ஏப்.1-ம் தேதி முதல் 99 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தேவைப்படுவதால், தமிழக அரசு குத்தகையை ரத்து செய்து நிலத்தை திரும்பப் பெற்று, மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டுக்கு உருவாக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவித்தது.
எனவே, கிண்டியில் நிலக் குத்தகை ரத்து செய்யப்பட்டு அரசு சுவாதீனம் செய்யப்பட்ட நிலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அமைப்பதற்காக, அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் ரூ4,832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தைத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு நிலமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை உருவாக்க உத்தரவிட வேண்டும் என வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் நீர் நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழைக் காலங்களில் அதிக நீரை சேமிக்க முடியும். நீர்நிலை உருவாக்குவதம் மூலம் வெள்ளம் ஏற்படுவதையும் தடுக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தீர்ப்பாயத்தில் தெரிவிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
The post கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்குவது பற்றி தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்ய வேண்டும்:தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் appeared first on Dinakaran.