×

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை: ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் தங்கம் வென்றது மகிழ்ச்சிக்குரியது. தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிராக்யானந்தா மற்றும் அர்ஜுன் ஆகியோர் தாங்கள் விளையாடிய போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதே போன்று, மகளிர் பிரிவில் இந்திய குழு அஸர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இதில் ஹரிக்கா, திவ்யா, வனிதா ஆகியோர் வெற்றியைப் பெற வைஷாலி ட்ரா பெற்றார்.

இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியா ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதே போன்று இந்திய வீரர்கள் முகேஷ், அர்ஜுன் திவ்யா மற்றும் வந்திகா ஆகியோர் தனி நபர் பிரிவில் தங்கத்தை கைப்பற்றினர். ஆண்கள் பிரிவில் குகேஷ், பிராக்யானந்தா, அர்ஜுன் மற்றும் பெண்கள் பிரிவில் வைஷாலி ஆகியோர் தமிழ்நாட்டின் பெருமையை உலக நாடுகளில் நிலைநாட்டி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் புகழ் சேர்துள்ளனர். வரலாற்று சாதனைப் படைத்த தமிழக செஸ் விளையாட்டு வீரர்களை தமாகா சார்பில் பாராட்டுகிறேன்.

The post உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை: ஜி.கே.வாசன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : World Chess Olympiad ,GK Vasan ,CHENNAI ,TAMAGA ,President ,Kukesh ,Pragyananda ,Arjun ,Tamil Nadu ,
× RELATED ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்