×

குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு காணிக்கையாக கார் வழங்கல்

பாலக்காடு : கேரளாவில் பிரசித்திப்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிப்படுகின்றனர். ஓணம், சித்திரை விஷூ உள்ளிட்ட பல்வேறு பண்டிகை நாட்களில் பக்தர்கள் அலைமோதும்.இந்த நிலையில் நேற்று குருவாயூர் கோயிலில் உச்சிக்கால பூஜை முடித்தப்பின் கார் நிறுவன கேரள டீலர் கேஸ்வின் நிர்வாக இயக்குநர் உதயகுமார் ரெட்டி, தேவஸ்தான சேர்மன் விஜயனிடம் கார் ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.

அவருக்கு தேவஸ்தான பிரசாதம் தொகுப்பு வழங்கப்பட்டது. குருவாயூர் கோயில் கிழக்குக்கோபுர நடை வாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவஸ்தான செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன், கேஸ்வின் சிஇஓ சஞ்சுலால் ரவீந்திரன், கோயில் டிஏ பிரமோத் களரிக்கல், மேலாளர் சுனில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு காணிக்கையாக கார் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Guruvayur Krishna Temple ,Kerala ,Onam ,Chitrai Vishu ,Uchikal Puja ,Guruvayur Temple ,
× RELATED குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் நாளை குசேலன் தின விழா