×
Saravana Stores

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை : தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தப்பட்டு புனித நீர் தெளிப்பு!!

ஹைதராபாத் : திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் கலப்படமான நெய் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து ஏழுமலையான் கோவிலில் தோஷ நிவாரண யாகம் நடத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு சர்வதேச அளவில் பிரபலமானது. நடப்பு ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் லட்டு தயாரிப்பதற்கான பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். அதில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக அறிவித்ததோடு, அதற்கான ஆய்வு அறிக்கையையும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கலப்படமான நெய் பயன்படுத்தப்பட்டதால் இன்று திருப்பதியில் தோஷ நிவாரண சாந்தி யோகம் நடத்தப்பட்டது. காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள் மற்றும் 3 ஆதவ ஆலோசகர்கள் தலைமையில் சாந்தி யாகம் நடத்தப்பட்டது. கோவிலின் தங்க கிணறு அருகே பழைய உண்டியல் காணிக்கை மண்டபத்தில் 3 யாக குண்டங்கள் அமைத்து இந்த யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் மூலவர் சன்னதி, லட்டு, அன்னபிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் தெளிக்கப்பட்டது. வழக்கமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தோஷங்களுக்கு பரிகாரமாக திருப்பதி கோவிலில் 3 நாட்கள் பவித்திர உற்சவம் நடத்தப்படும். தற்போது நெய் சர்ச்சையால் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தப்பட்டது.

The post திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை : தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தப்பட்டு புனித நீர் தெளிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Eummalayaan Temple ,Tirupati temple ,Tirupathi Eumalayan Temple ,Thirupathi ,
× RELATED தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஐதராபாத்தில் கைது செய்தது போலீஸ்