- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜி.கே.வாசன்
- சேலம்
- Tamaga
- தமிழ் மாநில காங்கிரஸ்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- நாமக்கல்
சேலம்: ‘தமிழக மீனவர்களை அவமானப்படுத்துவதை, ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று சேலத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று சேலத்தில் நடந்தது. இதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு தேவையான நிதியை வழங்க குரல் கொடுத்து வருகிறோம். எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தமாகா கூட்டணி நிலைப்பாடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். தற்போது கட்சியை வலுப்படுத்தும் பணியை மட்டுமே தீவிரமாக செய்து வருகிறோம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். மீனவர் பிரச்னை என்பது மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக மீனவர்களை அவமானப்படுத்துவதை, ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சில மாதங்களுக்கு முன்பு குறைந்திருந்த மீனவர்கள் கைது, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து இலங்கை அரசுடன் பேசி, இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த வேண்டும்’ என்றார்.
The post தமிழக மீனவர்களை அவமானப்படுத்துவதை ஒரு போதும் ஏற்க முடியாது: கொதிக்கும் ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.