×

தண்டவாளங்களில் நாசவேலை; குஜராத்தில் ரயில்களை கவிழ்க்க சதி

சூரத்: குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் கோசம்பா மற்றும் கிம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை நேற்று அதிகாலை வழக்கம் போல் ரயில்வே ஊழியர் சோதனை செய்தார். அப்போது சில இடங்களில் தகடுகளை அகற்றியும், சுமார் 40-50 போல்டுகளை கழற்றியும் சேதம் ஏற்படுத்தி இருந்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில்வே ஊழியரின் சோதனையில் தண்டவாளம் சேதப்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வழித்தடங்களில் வரும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. உடனடியாக சேதம் அடைந்த தண்டவாளங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டது. பின்னர் வழக்கம் போல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே மற்றும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்டவாளங்களில் நாசவேலை; குஜராத்தில் ரயில்களை கவிழ்க்க சதி appeared first on Dinakaran.

Tags : Gujarat Surat ,Kosamba ,Khim ,Gujarat ,Surat district ,Dinakaran ,
× RELATED குஜராத் சூரத் தொகுதியில் டிஸ்மிஸ்;...