உதய்பூர்: ராஜஸ்தான் கிராமத்தில் வனத்திற்குள் இழுத்து சென்று பெண் மற்றும் சிறுவனை கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் பகுதிக்கு உட்பட்ட உண்டித்தல் கிராமத்தில் வசிக்கும் கமலா என்ற பெண் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. கிராமவாசிகள் அவரை தேடத் தொடங்கினர். ஆனால், அன்றிரவு வரை கமலா குறித்த எந்த தகவலும் இல்லை. அடுத்த நாள் காலை கமலாவின் சடலம் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
அவரது உடல் காட்டுக்குள் நான்கு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, உண்டித்தல் அடுத்த பக்கத்து கிராமங்களில் சிறுத்தை பயம் பரவியது. பெரியா கிராமத்தைச் சேர்ந்த கெமாரம் என்பவர் தனது மகனுடன் வீட்டுக்குச் செல்லும் வழியில் சிறுத்தை ஒன்று தாக்கியதாக கூறினார். அதேநேரம் அவரது மகனை சிறுத்தை காட்டுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.
அடுத்த நாள் காலை வனப்பகுதியில் சென்று பார்த்த போது, சிறுவன் இறந்த நிலையில் கிடந்தான். அவரது கழுத்தில் சிறுத்தை கடித்த அடையாளங்கள் இருந்தன.கமலா மற்றும் சிறுவன் கெமராமின் மரணத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர், அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post வனத்திற்குள் இழுத்து சென்று பெண், சிறுவனை கொன்ற சிறுத்தை: ராஜஸ்தான் கிராமத்தில் பீதி appeared first on Dinakaran.