- அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா
- சென்னை
- அமேசான்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமேசான் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ்
- ரஞ்சித் பாபு
சென்னை: அமேசான் நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு பெஸ்டிவ் பாக்ஸ் பிரசாரத்தில் ஈடுபட்டு, தமிழ்நாடு மற்றும் சென்னையில் உள்ள நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் வகைக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க வரவேற்பை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமேசான் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் இயக்குநர் ரஞ்சித் பாபு கூறுகையில், “இந்த பண்டிகை காலத்தில் தமிழக மக்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை ஷாப்பிங் செய்யும்போது, இப்பகுதியில் இருந்து அமோக வரவேற்பை பெறுவதில் பெருமிதம் கொள்கிறோம். ஸ்மார்ட்போன்கள், பெரிய உபகரணங்கள், தொலைக்காட்சிகள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டிங்கிற்கான தேவை அதிகரித்து வருவதால், விலையில்லா மாதத்தவணை, வங்கி தள்ளுபடிகள், அமேசான் பே வெகுமதிகள், கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளிட்ட வசதியான மலிவு விருப்பங்களை வழங்கப்படும்.
இவை, முன்னணி பிராண்டுகளின் பரந்த அளவிலான கிரேட்-இன்-கிளாஸ் தயாரிப்புகளுடன், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்கின்றன. பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக, அமேசானில் உள்ள நாங்கள், இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2024-ன் போது, நுகர்வோர் மின்னணுப் பொருட்களைப் பரவலாகக் கொண்டு வரத் தயாராகி வருகிறோம். சென்னை ஒரு முக்கியமான சந்தை மற்றும் அமேசானின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் சந்தையாக, அமேசான் மாநிலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள உள்ளூர் கடைகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ.,களுடன் தொடர்ந்து பணியாற்றும், புதிய கருவிகள், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் இந்திய வணிகங்களின் தொழில் முனைவோர் உணர்வை வெளிக்கொணரும் முயற்சிகளைக் கொண்டுவரும்,’’ என்றார்.
The post அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலில் பண்டிகை கால சிறப்பு விற்பனை appeared first on Dinakaran.