×
Saravana Stores

பதஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனையில் அதிநவீன ரத்த பரிசோதனை கருவி: ஆச்சார்யா பாலகிருஷ்ணா திறந்து வைத்தார்

சென்னை: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள பதஞ்சலி மருத்துவமனையில் அதிநவீன ரத்த பரிசோதனை இயந்திரத்தை ஆச்சார்யா பாலகிருஷ்ணா திறந்து வைத்தார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பதஞ்சலி மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் அதிநவீன இயந்திரத்தை பதஞ்சலி ஆயுர்வேதாவின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆச்சார்யா பாலகிருஷ்ணா திறந்து வைத்து பேசுகையில், ‘நோயாளிகளின் நலமே பதஞ்சலியின் முக்கிய நோக்கம். இங்கு வரும் நோயாளிகளுக்கு சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம். நவீன இயந்திரமான மைண்ட்ரே பிசி 760 முழுமையான ரத்த பரிசோதனையில் துல்லியமான மற்றும் விரைவான முடிவுகளை வழங்கும். ரத்த சோகை, லுகேமியா, த்ரோம்போசைட்டோபீனியா (குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை), த்ரோம்போசைட்டோசிஸ், ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் மற்றும் செப்சிஸ் போன்ற நோய்களைக் கண்டறிவதில் இது நன்மை அளிக்கும்,’’ என்றார். நிகழ்ச்சியில் டெல்லி மத்திய பல்கலைகழக துணைவேந்தர் நிவாஸ் வர்கெடி, பேராசிரியை ஷிவானி, மூத்த டாக்டர்கள் எஸ்.ரேணுகா, மனோஜ் குமார்சிங், மனிஷ் லக்கேடா, தினேஷ் பாலி, சஞ்சய்குமார், கேத்தன், சோம்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பதஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனையில் அதிநவீன ரத்த பரிசோதனை கருவி: ஆச்சார்யா பாலகிருஷ்ணா திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Patanjali Ayurveda Hospital ,Acharya Balakrishna ,Chennai ,Patanjali Hospital ,Haritwar, Uttarakhand ,Haridwar, Uttarakhand ,Managing Director ,Patanjali Ayurveda ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை