×
Saravana Stores

வேளாண் கல்லூரியில் மருத்துவ முகாம்

 

புதுக்கோட்டை,செப்.21: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடியில் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் முகாம் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மனம் மற்றும் உடல் திடம் பற்றிய வாழ்வியல் யோகா ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் பயிற்சியாளர் இமயராணி கலந்துகொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான எளிமையான யோகா பயிற்சியினை வழங்கினார். பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கேற்று பயனடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, மருத்துவர்கள் பெரியசாமி, இளங்கோ, சின்ராஜ், அனிதா, தெய்வ பிரகாஷ் சுயமரியாதை ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சைகளை அளித்தனர்.

முகாமில் மாணவர்களின் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடந்தது இதில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் – புனித தளங்கள் மற்றும் பள்ளி வளாகத்தினை கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர். தொடர்ச்சியாக வேளாண் பயிர் சாகுபடியில் நீர் மற்றும் களை மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து உரையாடல் நடந்தது இதில் பொதுமக்கள் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்தனர். இறுதியாக மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றி இரண்டாம் நாள் நலத்திட்ட முகாமை இனிதாக நிறைவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வேங்கடலெட்சுமி செய்திருந்தார்.

The post வேளாண் கல்லூரியில் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Camp ,Agricultural ,College ,Pudukottai ,Klikkudi ,Annavasal ,Kudumianmalai Government Agricultural College and ,Research Station ,Medical Camp ,Dinakaran ,
× RELATED காவலர் குறைதீர் சிறப்பு முகாம்; 282...