- கரம்பாக்குடி
- ரவிச்சந்திரன்
- கறம்பக்குடி கச்சேரி ரோடு
- புதுக்கோட்டை மாவட்டம்
- கறம்பக்குடி தீயணைப்பு துறை
- தின மலர்
கறம்பக்குடி,செப்.21: கறம்பக்குடி பகுதியில் 2 வீட்டுக்கள் பதுங்கி பாம்புகளை தீயணைப்பு துறையினர் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதி பகுதியில் வசிப்பவர் ரவிச்சந்திரன் தொழிலாளி. இவரது வீட்டிற்குள் நேற்று மாலை விஷ பாம்பு புகுந்து விட்டதாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் சிறை சீலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் புகுந்த விஷ பாம்பை உயிருடன் மீட்டு அருகில் உள்ள வன பகுதிக்குள் விட்டனர் விஷ பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர்.
இதேபோல், கறம்பக்குடி யாதவர் தெருவை சேர்ந்தவர் வேம்பையன். தொழிலாளி. இவரது வீட்டிற்குள் விஷ பாம்பு இருப்பதாக நேற்று மதியம் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சிறை சீலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டுக்குள் பதுங்கி இருந்த பயமுறுத்திய பாம்பை உயிருடன் மீட்டு அருகில் உள்ள வன பகுதிக்குள் விட்டனர். பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை அக்கம் பக்கத்தினர் பாராட்டினர்.
The post கறம்பக்குடி பகுதியில் 2 வீட்டுக்குள் பதுங்கிய பாம்புகள் appeared first on Dinakaran.