×

ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

குலசேகரம், செப்.21: ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செறுகோல் பகுதியில் உள்ள மலைக்குன்று உடைப்பை கண்டித்தும் இதற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் ஆற்றூர் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நாம் தமிழர் கட்சி குமரி மத்திய மாவட்ட செயலாளர் சீலன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் பெல்வின் ஜோ, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிக்ட் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் கலந்து கொண்டார். மேற்கு தொகுதி இணை செயலாளர் பிரவினா, விளவங்கோடு செயலாளர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Athur ,Tamil Party ,Kulasekaram ,Tamil Nam Party ,Aathur ,Aattur ,Serugol ,
× RELATED ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம்