×

போலி வாகன உதிரிபாகம் விற்ற நிறுவனம் மீது வழக்கு

கோவை, செப். 21: கோவை ராம்நகர் பொன்னையா தெருவில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இங்கு பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான கிளட்ச் பிளேட், ஏர் பில்டர், கேபிள் உள்ளிட்டவை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து சென்னையை சேர்ந்த அதிகாரிகள் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்போல் சென்று உதிரிபாகங்களை வாங்கி பார்த்தனர். அப்போது, அவர்கள் தங்களது நிறுவனம் பெயரில் போலியான உதிரிபாகங்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் போலி வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்த நிறுவனம் மீது காப்புரிமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போலி வாகன உதிரிபாகம் விற்ற நிறுவனம் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ponnaiah Street, Ramnagar, Coimbatore ,Chennai ,Dinakaran ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த...