- மலையக பயிர்கள் திணைக்களம்
- திருவள்ளூர்
- கிராமப்புற வளர்ச்சி
- பஞ்சாயத்து துறை
- தோட்டக்கலை- மலை பயிர் துறை
- கொசவன் பாளையம் லட்சுமிபதி நகர்
- பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்
- மாவட்டம்
- தோட்டக்கலை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொசவன் பாளையம் லட்சுமிபதி நகரில் நேற்று ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் பனை மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் பனை மேம்பாட்டு இயக்கம் 2024 – 2025 மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 277 பனை மரக்கன்றுகள் நடும் இலக்கினை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்றுய தினம் முதற்கட்டமாக குளத்தைச் சுற்றி 40 மரக்கன்றுகள் நடப்பட்டது.
பனை மரக்கன்றுகள் நடுவதனால் கரைகள் பலப்படுத்தி குளத்தை பாதுகாப்போம் வைத்திருக்க உதவும் என்பதால் குளத்தினை சுற்றி பனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், குளக்கரைகள் உள்ள அனைத்து இடங்களில் பனை மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இங்கே நடவு செய்யப்பட்ட பனை மரக்கன்றுகள் ஒரு வயது ஆனது என்பது குறிப்பிடத்தக்கது என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஆ.கற்பகம், துணை இயக்குநர் தோட்டக்கலை துறை ஜெபக்குமாரி அணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) தமோகன், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் க.வெங்கடேசன், ஆவடி வட்டாட்சியர் சசிகலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் பனை மரக்கன்றுகள் நடும் திட்டம்: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.