சென்னை: ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு 78 நாட்களுக்கு இணையான சம்பளம் போனஸ் ஆக அறிவிக்கப்பட்டாலும் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் 30 நாட்களுக்கு இணையான போனஸ் தொகை மட்டுமே வழங்கப்பட்டது. போனஸ் கணக்கீடுக்கான ஊதிய உச்சவரம்பு 2014-15 நிதியாண்டில் ரூபாய் 7000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே ஆண்டில் 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ரயில்வே ஊழியர்கள் அதிகபட்சமாக பெற்ற போனஸ் தொகை ரூ. 17,951 மட்டுமே. கடந்த 9 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான போனஸ் மேலும் அதிகபட்ச போனஸ் தொகையான ரூ. 17951ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 7வது ஊதியக்குழு படிநிலை ஒன்றுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.18 ஆயிரம் ஆக 1.1.2016 முதல் உயர்த்தி இருந்தாலும் போனஸ் கணக்கீட்டிற்கான ஊதிய வரம்பு ரூ. 7 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரம் ஆக உயர்த்தப்படவில்லை. தற்போது வழங்கப்படும் போனஸ் தொகையான ரூ. 17951 அகவிலைப் படியை சேர்க்காத குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ. 18 ஆயிரத்திற்கு 30 நாட்களுக்கு இணையான போனஸ் ஆக மட்டுமே இருக்கும்.
குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ. 18 ஆயிரத்திற்கு 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான போனஸ் கணக்கிடப்பட்டால் அது ரூ. 46 ஆயிரம் ஆக இருக்கும். போனஸ் தொகை குறைந்த பட்சம் ஊதிய படிநிலை ஒன்றிற்கான அடிப்படை ஊதியம் ரூ. 18 ஆயிரத்திலிருந்து கணக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டாலும், குரூப்-சி பணிகளில் ஊதிய படிநிலை 8 வரை உள்ள ஊழியர்களுக்கு அந்தந்த படிநிலைகளுக்கு தகுந்தார் போல் போனஸ் தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் ஒன்றிய ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
The post கடந்த 9 ஆண்டுகளாக உயர்த்தப்படாத போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: ரயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.