×
Saravana Stores

சாம்சன், ஈஸ்வரன் சதம்

அனந்தபூரில் நடைபெறும் துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில், முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன் எடுத்திருந்த இந்தியா டி நேற்று 349 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சஞ்சு சாம்சன் 106 ரன் (101 பந்து, 12 பவுண்டரிம், 3 சிக்சர்) விளாசினார். படிக்கல் 50, பாரத் 52, ரிக்கி 56, ஷரண்ஷ் 26 ரன் எடுத்தனர். இந்தியா பி அணியின் நவ்தீப் சைனி 5, ராகுல் சாகர் 3 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா பி 2ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ஈஸ்வரன் 116 ரன் (170 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். வாஷிங்டன் சுந்தர் 39, ராகுல் சாகர் 0 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

மற்றொரு போட்டியில், முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்திருந்த இந்தியா ஏ நேற்று 297 ரன்னுக்கு ஆட்டமிழந்தது (ஷாஸ்வத் ராவத் 124, முலானி 44, ஆவேஷ் கான் 51*, பிரசித் 34). இந்தியா சி பந்துவீச்சில் விஜய்குமார் 4, அன்ஷுல் 3, கவுரவ் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா சி அணி 2வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்துள்ளது. அபிஷேக் பொரேல் 82 ரன் விளாசினார். தொடக்க வீரர்கள் கேப்டன் ருதுராஜ், சாய் சுதர்சன் தலா 17 ரன்னில் வெளியேறினர். இந்திரஜித் 34 ரன் எடுத்து காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். நரங் 35, விஜய்குமார் 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ தரப்பில் ஆகிப் கான் 3, ஷாம்ஸ் முலானி 2, ஆவேஷ், தனுஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post சாம்சன், ஈஸ்வரன் சதம் appeared first on Dinakaran.

Tags : Samson ,Ishwaran Satham ,Dulip Cup ,Anantapur, India D ,SANJU SAMSON ,Dinakaran ,
× RELATED பேக் டு பேக் சென்சுரி அடித்து சஞ்சு...