×
Saravana Stores

திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் : உயர்நீதிமன்றத்தை நாடிய ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ்!!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் குஜராத் ஆய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் நெய்யில் 37 சதவீதம் கொழுப்பு கலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஜெகன் மோகன் ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கி பெறப்பட்ட நெய்யில் சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ், ராப்சீட், ஆளி விதை, பருத்தி விதை, மீன் எண்ணெய், பாமாயில் மற்றும் மாட்டிறைச்சி, பன்றி கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், லட்டு குறித்து சந்திரபாபு நாயுடு கருத்து தொடர்பாக உயர்நீதிமன்றம் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உண்மை நிலவரத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் வழக்கறிஞர் சார்பில் மனுவில் கோரிக்கை வைங்கப்பட்டது. இந்த மனு வரும் புதன்கிழமை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என ஆந்திர உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் : உயர்நீதிமன்றத்தை நாடிய ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ்!! appeared first on Dinakaran.

Tags : Tirupathi Temple ,Court ,S. R Congress ,Thirumalai ,Jegan Mohan ,AP ,Chandrababu ,Tirupathi Elumalayan Temple ,R-Congress ,Court. S. R Congress ,
× RELATED திருப்பதி கோயிலுக்கு ஆவின் நெய் அனுப்ப தமிழக அரசு பரிசீலனை