கந்தர்வகோட்டை,செப்.20: கந்தர்வகோட்டை பகுதிகளில் தென்னை கீற்று விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் ஆதனக்கோட்டை, பெருங்களூர் பகுதிகளில் அதிக அளவில் கீற்று வீடுகளும் ஆஸ்பெட்டஸ் வீடுகளும் உள்ளன. மழையில் காரணமாகவும், காற்றில் காரணமகாவும் கீற்று வீடுகள் பாதிப்பு அடைந்ததால் தற்சமயம் பெரும்பாலானோர் கீற்று மேய்ந்து வருகிறர்கள்.
இப்பகுதியில் 100 எண்ணிக்கை கொண்ட கட்டு ஒன்று 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இப்பகுதியில் பெரும்பாலானோர் கீற்று வீடுகளிலும் ஆஸ்ப்பட்டாஸ் வீடுகளும் வசித்து வரும் சூழ்நிலையில் ஒன்றிய அரசு வழங்கும் வீடுகளுக்கு கேட்கப்படும் ஆவணங்கள் ஏழ்மையான மக்கள் கொடுக்க முடியவில்லை. எனவே தமிழக அரசு வழங்கும் வீட்டு வரி ரசீது மூலம் ஏழைகளுக்கு வீடு வழங்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று ஏழை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கந்தர்வகோட்டை பகுதிகளில் தென்னங்கீற்று விற்பனை விறுவிறுப்பு appeared first on Dinakaran.