×

மதுரையில் கொளுத்தும் வெயில் எதிரொலி ஆவின் மோர், தயிர் விற்பனை ஜோர்

மதுரை, செப். 20: மதுரையில் கடந்த 5 நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது. நேற்றைய நிலையில் 105 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயிலின் தாக்கம் இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகளவிற்கு தயிர் மற்றும் மோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக கடந்த 5 நாட்களில் ஆவின் நிறுவன தயாரிப்புகளாக தயிர் மற்றும் மோர் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆவின் பொது மேலாளர் சிவகாமி கூறுகையில், ‘‘இயல்பான நாட்களில் 2 ஆயிரம் லிட்டர் தயிர் விற்பனையாவது வழக்கம். ஆனால் கடந்த 5 நாட்களாக நாளொன்றுக்கு 2,700 லிட்டர் வரை தயிர் விற்பனையாகிறது. மோர் இயல்பான நாட்களில் தினந்தோறும் 200 லிட்டர் விற்பனையாகும். ஆனால் தற்போது நாள்தோறும் 800 லிட்டர் வரை விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தயிர் மற்றும் மோர், ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிக அளவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது’’ என்றார்.

The post மதுரையில் கொளுத்தும் வெயில் எதிரொலி ஆவின் மோர், தயிர் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து...