×

போதையில் விநாயகர் சிலையை சேதப்படுத்திய 2 பேர் கைது

சேலம், செப்.20: சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவில் வழிவாய்க்கால் காளியம்மன் கோயில் வளாகத்தில் 2 அடியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கோயிலுக்கு வந்தபோது விநாயகர் சிலை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோயில் நிர்வாக தலைவர் செந்தில்குமார் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ேராடு பகுதியைச் சேர்ந்த பூபதி (21), வழிவாய்க்கால் காளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் (21) ஆகிய இருவரும் சேர்ந்து குடிபோதையில் விநாயகர் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பூபதி, மணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post போதையில் விநாயகர் சிலையை சேதப்படுத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Salem ,Kaliyamman temple ,Lagvaikal ,Salem Dadagapatti Tagore Street ,
× RELATED விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா