×
Saravana Stores

நாளை அமெரிக்கா பயணம் மோடி, பைடன் சந்திப்பில் 2 ஒப்பந்தம் கையெழுத்தாகிறது: வெளியுறவு செயலாளர் தகவல்

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்காவின் டெலாவாரேயில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அக்டோபர் 23ம் தேதிவரை அமெரிக்காவில் இருக்கும் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இந்த நிலையில்,பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து ஒன்றிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று கூறுகையில்,‘‘ வருடாந்திர குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், ஐநா பொது சபையில் உரையாற்றுவதற்காகவும் பிரதமர் 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். குவாட் மாநாட்டின் பின்னணியில் அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்,ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துவார்.

பைடனுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு, இந்தியா-அமெரிக்கா போதை பொருள் கட்டமைப்பு ஆகியவை தொடர்பான 2 ஒப்பந்தங்களில் மோடி கையெழுத்திட உள்ளார். இந்த சந்திப்பின் போது ரஷ்யா -உக்ரைன் போருக்கு தீர்வு காணும் நோக்கில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து பைடனிடம் அவர் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

* டிரம்பை சந்திப்பாரா மோடி?
அமெரிக்க பயணத்தின் போது முன்னாள் அதிபர் டிரம்ப்பை மோடி சந்திப்பாரா என்ற கேள்விக்கு விக்ரம் மிஸ்ரி நேரடியாக பதில் அளிக்கவில்லை. அவர் கூறுகையில் ‘‘ அமெரிக்க பயணத்தில் பல சந்திப்புகளை நடத்த முயற்சிக்கிறோம். குறிப்பிட்ட எந்த சந்திப்பு பற்றியும் சொல்ல முடியாது’’ என்றார். இரண்டு நாட்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் பேசிய டிரம்ப் அமெரிக்காவுக்கு வரும் மோடியை சந்திப்பேன் என்று கூறினார்.

 

The post நாளை அமெரிக்கா பயணம் மோடி, பைடன் சந்திப்பில் 2 ஒப்பந்தம் கையெழுத்தாகிறது: வெளியுறவு செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Modi ,US ,Biden ,New Delhi ,India ,USA ,Japan ,Australia ,Quad' summit ,Wilmington, Delaware, USA ,President ,Joe Biden ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனை போல்...