×
Saravana Stores

அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்காவிட்டால் மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் கிளை

மதுரை: அனைத்து தாலுகாக்களிலும் குறைந்தபட்சம் மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகல் அமைக்காவிட்ட மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட நகர்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை அமைக்ககோரி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பூபேஸ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் மாவட்ட நகர் பகுதியில் உள்ள வல்லல் பாரி என்னும் நடுநிலைபள்ளியை உயர்நிலைபள்ளியாக தரம் உயர்த்த முன்மொழுவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பின்னரே மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும். நேரடியாக நடுநிலைபள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த விதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடஒதுக்கீட்டில் 7.5% உளொதுக்கீடு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் நடுநிலை பள்ளியை உயர்நிலைபள்ளியாக தரம் உயர்த்தும் நடவடிக்கையே 3 வருடங்களாக நிலுவையில் உள்ளது. உயர்நிலைபள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த சுமார் 15 ஆண்டுகளாவது ஆகும். தமிழ்நாடு அரசு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குகிறது.

இந்தசூழலில் அனைத்து தாலுக்காக்களிலும், குறைந்த பட்சம் மாவட்ட தலைநகரங்களிலாவது அரசு மேல்நிலை பள்ளிகளை அமைக்கவேண்டும். அவ்வாறு செய்ய இயலவில்லை எனில் மருத்துவ உள்ஒதுக்கீடை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறபித்து வழக்கு விசாரணையை அக்.14-ம் தேதிக்கு உத்தரவிட்டனர்.

The post அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்காவிட்டால் மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : ICORD BRANCH ,Madurai ,High Court ,
× RELATED தெலுங்கு பேசும் மக்கள் குறித்து...