×

பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

செங்கல்பட்டு: மறைமலைநகர் நகராட்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். செங்கல்பட்டு நகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்  நடந்தது. கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். எம்பி செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, குடிநீர் இணைப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.தொடர்ந்து, தென்னக ரயில்வே துறையின் மூலம் நில எடுப்பு நடவடிக்கைக்கு  உட்பட்ட செங்கல்பட்டு கரிமேடு பகுதியைச் சேர்ந்த 81 பேருக்கு மாற்று இடமாக சென்னேரி கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பில், தென்னை மரம்  ஏறும் கருவி, தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்  சார்பில் மரக்கன்றுகள் உள்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், நகராட்சிகளின் மண்டல இயக்குநர் சசிகலா, செங்கல்பட்டு ஆர்டிஓ சாகிதாபர்வீன், செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister Thamo Anparasan ,Chengalpattu ,Minister ,T. Mo. Anparasan ,Public ,Grievance ,Camp ,Karamalai Nagar Municipality ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணுமிட முகவர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்