- அரசு பள்ளி மாணவர்களின் தூய்மை திருவிழா
- பட்டுக்கோட்டை
- ஸ்வச் பாரத் இயக்கம் ஸ்வச் யே சேவா 2024
- ஸ்வச் திருவிழா
- காந்தி
- ஜெயந்தி
- புதுக்கோட்டை ஊராட்சி
- பட்டுக்கோட்டை ஊராட்சி
- யூனியன்
- தஞ்சாவூர் மாவட்டம்
- அரசு பள்ளி மாணவர்களின் தூய்மை விழா விழிப்புணர்வு பேரணி
பட்டுக்கோட்டை, செப். 19: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை பாரத இயக்கம் தூய்மையே சேவை 2024 தூய்மைத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 300 மரக்கன்றுகள் தனிநபர் இடங்களில் நடவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. விழிப்புணர்வு பேரணிக்கு புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரிவெங்கடாசலம் தலைமை வகித்தார்.
பேரணியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, மழைநீர் சேகரித்தல், மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரப் பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியவாறு ம் கலந்து கொண்டனர். பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.