- பரதநாட்டிய பயிற்சி வகுப்பு துவக்க விழா
- ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி
- ஜெயங்கொண்டம்
- ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை
- பரதநாட்டியம்
- Niveda
- தமிழ்த்துறை
- டாக்டர்
- அம்பிகா…
- பரதநாட்டியப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா
- ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி
ஜெயங்கொண்டம், செப். 19: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான பரதநாட்டிய பயிற்சி வகுப்பு பயிற்றுனர் செல்வி நிவேதாவின் பரதநாட்டியத்துடன் தொடக்கவிழா நடைபெற்றது. தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர். அம்பிகா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் இரமேஷ் தலைமை வகித்து பேசினார்.
இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் இராசமூர்த்தி மற்றும் உடற்கல்வி இயக்குநர் முனைவர் அன்பரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக கல்லூரியின் கலை பண்பாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேலன் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பரதநாட்டிய பயிற்சிக்கு பதிவு செய்த மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது.
The post ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் பரதநாட்டிய பயிற்சி வகுப்பு தொடக்க விழா appeared first on Dinakaran.