ராஜபாளையம், செப்.19: ராஜபாளையத்தில் ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தில் தமிழக அரசு தங்களையும் இணைக்க கோரி அரசுக்கு 40,000 கடிதங்கள் அனுப்பும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜபாளையத்தில் மாநில துணைத்தலைவர் ராமசுப்பு தலைமையில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தலைமை தபால் அலுவலகத்தில் வைத்து ராஜபாளையம் தலைமை அஞ்சல் நிலைய அதிகாரியிடம் 120 கடிதங்கள் வழங்கப்பட்டது.
மாநில அமைப்பு மூலம் ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி 40,000 கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளோம். மேலும் வரும் செப்டம்பர் 27ம் தேதி தமிழக முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மாநிலத் துணைத் தலைவர் ராமசுப்பு தெரிவித்தார்.
The post ஊராட்சி செயலாளர்கள் சார்பில் அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் appeared first on Dinakaran.