×

பிஏபி கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம்

காங்கயம், செப். 19: காங்கயம் பழையகோட்டை சாலையின் குறுக்கே செல்லும் பிஏபி பிரதான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், போலீசார் உடலை மீட்டு காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிஏபி கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம் appeared first on Dinakaran.

Tags : PAP canal ,KANGAYAM ,PAP ,Kangayam Old Kottayam Road ,
× RELATED லண்டனும்…அண்ணாமலையும்… சீமான் கருத்து