×

உலக நோயாளிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ேகாவை, செப். 19: உலக நோயாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.இந்த நாளில் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுகாதார பாதுகாப்பை மேம்படுத்துதல் ஊக்குவிக்கப்படுகிறது. நடப்பாண்டில், நோயாளிகளின் பாதுகாப்பிற்கான நோய் அறிதலை மேம்படுத்துதல் என்ற பொருளில் அனுசரிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.பேரணியை மருத்துவமனையின் டீன் நிர்மலா துவக்கி வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் நடந்த பேரணியில் டாக்டர்கள் கலந்துகொண்டு நோயாளிகளின் பாதுகாப்பு எங்களின் பொறுப்பு, நோயின் உண்மையை அறிவது தீர்வு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேனர்களை கையில் ஏந்தி நோயாளிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post உலக நோயாளிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Global Patient Safety Awareness Rally ,Ekavai ,World Patient Day ,Dinakaran ,
× RELATED கோவையில் நாளை `மக்களை தேடி’ சிறப்பு முகாம்