×

பேச்சிப்பாறை அரசு மேல்நிலை பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

குலசேகரம், செப். 19: பேச்சிப்பாறையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஆய்வு செய்தார். இயற்கையான காற்றோட்டமான இடத்தில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் பூங்கா அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முனைவர் சஜிதா உட்பட பலர் உடனிருந்தனர். அப்போது மாணவர்கள் தரப்பில் நூலகம் மற்றும் கலையரங்க கட்டிடம் கட்டித்தரவும், ஆய்வக கட்டிடம் பழுதுபார்க்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

The post பேச்சிப்பாறை அரசு மேல்நிலை பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pachiparai ,Government Higher Secondary School ,Kulasekaram ,Akhu Meena ,Government Tribal Boarding High School ,
× RELATED தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்...