×

திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் (76) உடல்நலக் குறைவு காரணமாக மீஞ்சூரில் உள்ள வீட்டில் நேற்று காலமானார். திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவராக க.சுந்தரம், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், அவர் நேற்று பிற்பகல் காலமானார். திமுகவின் பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவரான க.சுந்தரம், 2 முறை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சராகவும், 1996-2001 திமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2022ம் ஆண்டு திமுக அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், க.சுந்தரத்திற்கு ஆதிதிராவிட நலக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது. க.சுந்தரத்திற்கு எழுலணி என்ற மனைவியும், செல்லக்குமார், தமிழ்உதயன், தமிழ்ப்பிரியன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

The post திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Former ,DMK ,minister ,K. Sundaram ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,Meenjoor ,Adhi Dravida welfare committee ,former minister ,
× RELATED தேர்தல் வழக்கு: அதிமுக முன்னாள்...