×
Saravana Stores

கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொறியல்

தேவையான பொருட்கள்

2 ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
2 பச்சை மிளகாய்
1 வெங்காயம் நறுக்கியது
1 கருவேப்பிலை
2 டேபிள் ஸ்பூன் ஊறிய பாசி பருப்பு
கால் கிலோ முட்டைகோஸ் நறுக்கியது
துருவிய தேங்காய் 3 ஸ்பூன்
அரை டீஸ்பூன் அளவிற்கு உப்பு

செய்முறை:

முதலில் கடாயை நன்றாக சூடாக்கிக் கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடான பின்னர், அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, கொஞ்சம் கருவேப்பிலை மற்றும் பொடியாக கட் செய்த இரண்டு பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு அரை டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து விட்டு நன்றாக வதக்குங்கள். உப்பை சேர்த்து வதக்குவதால் வெங்காயமானது சீக்கிரமே வதங்கி விடும். வெங்காயம் நன்றாக வதங்கியப் பின்னர், அதில் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த இரண்டு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் இதனுடன் ஒரு கால் கிலோ அளவு நன்றாக நறுக்கி வைத்திருந்த முட்டைக்கோஸை போட்டு மெதுவாக வதக்குங்கள். தீயானது குறைவான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முட்டைக்கோஸானது நன்றாக வெள்ளை நிறத்தில் வரும் வரை நன்றாக வதக்குங்கள். அதே நேரத்தில் கோஸானது மிகவும் வெந்தும் விடவும் கூடாது. பின்னர் அதனை மூடி போட்டு மூடி ஐந்திலிருந்து எட்டு நிமிடங்கள் வரை நன்றாக வேக விடுங்கள். இப்போது நீங்கள் மூடியை திறந்து பார்த்தீர்கள் என்றால் முட்டைக்கோஸ் நன்றாக வெந்து இருக்கும். அதன் பின்னர் அதனுடன் தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி விட்டு எடுத்தால் தற்போது சூப்பரான கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் தயார்..

The post கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொறியல் appeared first on Dinakaran.

Tags : Kalyan Home Cabbage Engineering ,
× RELATED ஆப்பிள் ரிப்பன் சேவ்