×
Saravana Stores

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி தமிழக அரசு ஆலோசனை..!!

சென்னை: நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. சமீபகாலமாக தமிழகம் உட்பட இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

தமிழகத்தில் மட்டும் 30-க்கும் அதிகமானோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இரவில் தடைவிதிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்காக டெபாசிட் செலுத்தும் தொகைக்கும் உச்ச வரம்பு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறுவர்கள் அடிமையாவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கலாமா என யோசனையும் செய்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டு விளையாட ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி தமிழக அரசு ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,Chennai ,Tamil Nadu government ,India ,Tamil Nadu ,
× RELATED காவல்துறையில் பணிக்கு...