×
Saravana Stores

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் பாதுகாப்பு தின உறுதி மொழி ஏற்பு

சாயல்குடி, செப்.18: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி அன்று உலக சுகாதார நிறுவனத்தால் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் கடை பிடிக்கப்படுகிறது. அதன்படி நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ அலுவலர் வினோத்குமார் தலைமையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,நோயாளிகளின் சுகாதார பராமரிப்பை பாதுகாப்பானதாக ஆக்க முழுமையாக அர்ப்பணிப்பேன், நோயாளியின் பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளிலும் என்னுடைய அறிவையும் திறனையும் மேம்படுத்திக் கொள்வேன்,

நோயாளியின் பாதுகாப்பு குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன், நோயாளியின் பராமரிப்பில் வெளிப்படை தன்மையும், ஆதரவையும், முன்னேற்றத்தையும் வளர்ப்பதற்காக குழுவாக செயல்படுவேன். நோயாளியின் பாதுகாப்பிற்காக சகமருத்துவ வல்லுநர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிக்கும் துணை நிற்பேன் உள்ளிட்ட நோயாளிகள் பாதுகாப்பு உறுதி மொழியை, நிலைய பணியாளர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவ செவிலியர்கள் காளீஸ்வரி,சண்முகபிரியா,மருந்தாளுனர் அனுப்பிரியா, ஆய்வக நுட்பனர் முனியராஜ், இடை நிலை சுகாதார அமைப்பாளர்கள், நதியா, சுபா, வில்வகீதா, கிராம சுகாதார செவிலியர் பினாரன்ஸ் நைட்டிங்கேள் உள்ளிட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

The post ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் பாதுகாப்பு தின உறுதி மொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Patient Safety Day ,Sayalkudi ,World Patient Safety Day ,World Health Organization ,
× RELATED போதை தடுப்பு விழிப்புணர்வு