தஞ்சை, செப்.18: கள்ளப் பெரம்பூர் பகுதியில் விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை பிடித்து காட்டில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி ஒருவர் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவருக்கு சொந்தமாக கள்ளப் பெரும் முறை எடுத்து முதல் சேத்தி மற்றும் இரண்டாம் சேத்தி பகுதியில் விளைநிலங்கள் உள்ளன. அங்கு நெல் நாற்றுகள் அனைத்தும் கதிர் விடும் பருவத்தில் உள்ளது.
இந்த நிலையில், அங்கு சுற்றி தெரியும் காட்டுப்பன்றிகள் வயல்களில் இறங்கி நெல் நாற்றுகளை நாசம் செய்கிறது. எனவே, இது குறித்து வனத்துறையினரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நெல் நாற்றுகள் அனைத்தும் வீணாகும் நிலையில் உள்ளது. எனவே காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
The post விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை பிடித்து காட்டில் விட வேண்டும் appeared first on Dinakaran.