- அய்யலூர்
- வேடசந்தூர்
- தங்கம்மாபட்டி
- அய்யநல்லூர்
- திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை
- அய்யலூர் கடவூர்
- நாமக்கல் மாவட்டம், கீழ்பாபரளி
- தின மலர்
வேடசந்தூர், செப். 18: அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தனது நண்பர்கள் இருவருடன் டூவீலரில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் கடவூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு முன்னால் நாமக்கல் மாவட்டம், கீழ்பரளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (47) ஓட்டிய லாரி திருச்சி நோக்கி சென்றது. அப்போது டூவீலர் திடீரென லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் 3 சிறுவர்களும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ மாவட்டத்தில் சமீபகாலமாக மாணவ, மாணவிகள் டூவீலர்களில் பள்ளிக்கு வருவது அதிகரித்துள்ளது. இதில் லைசென்ஸ் பெற தகுதியில்லாத 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளே அதிகம். முறையாக வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி இல்லாததால் தினமும் 20க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான வாகன விபத்து நடப்பது தொடர்கதையாக உள்ளது. கல்லூரி சாலையில் பள்ளி, கல்லூரி விடும் நேரத்தில் மாணவர்கள் அசுர வேகத்தில் வாகனங்களை ஓட்டி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்க மோட்டார் வாகன துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், லைசென்ஸ் இன்றி ஓட்டுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும்’’ என்றனர்.
The post அய்யலூர் அருகே லாரி மீது டூவீலர் மோதி 3 சிறுவர்கள் படுகாயம் appeared first on Dinakaran.