கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் 1987ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வன்னியர் சமூகத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் காவல்துறையால் 21 வன்னியர் சங்க நிர்வாகிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த நினைவாக செப்டம்பர் 17ம் தேதி ஆண்டுதோறும் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூரில் தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான மணிமேகலை கேசவன் வரவேற்றார். பாமக நிர்வாகிகள் எளாவூர் கார்த்திகேயன், மல்லிங்குப்பம் செல்வம், தம்புரெட்டிபாளையம் சங்கர், ஐயர் கண்டிகை ரவி, குமார், மணிகண்டன், துலுக்காணம், மோகன், லோகேஷ், கார்த்திக், சேஷா, வெங்கடேசன், மாரிமுத்து, மகேஷ், பிரதாப், குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து முன்னாள் மாநில பாமக பொது செயலாளர் செல்வராஜ் 21 தியாகிகளுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
The post கும்மிடிப்பூண்டி அருகே பாமக சார்பில் தியாகிகளுக்கு மவுன அஞ்சலி appeared first on Dinakaran.