×
Saravana Stores

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது : உச்சநீதிமன்றம்

டெல்லி : பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,”இரவுப் பணியை செய்வதை தவிர்க்குமாறு பெண் மருத்துவர்களுக்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட முடியாது. பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர். அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர். பாதுகாப்பை கருதி இரவுப் பணியை தவிர்க்குமாறு அறிவித்த மேற்கு வங்க அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்,”இவ்வாறு தெரிவித்துள்ளது.

The post பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Kolkata R. G. ,West Bengal ,
× RELATED டெல்லி காற்று மாசு: உச்சநீதிமன்றம் அதிருப்தி