சித்தூர் : சித்தூரில் பைக் மோதிய தகராறில் வாலிபரை தாக்கிய 4 பேரை ேபாலீசார் கைது செய்தனர். சித்தூர் மாநகரத்தில் சந்தைப்பேட்டை பகுதியில் ஒரு இளைஞரை 4 பேர் சேர்ந்த கும்பல் கடந்த 13ம் தேதி இரவு சித்தூர் நகரம் சாந்தப்பேட்டை, பகுதியில் சார மாறியாக தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த இளைஞரை சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த எஸ்பி மணிகண்டன் உத்தரவின்பேரில் இரண்டாவது காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் சேர்ந்த கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் 4 பேர் தலைமறைவாக இருந்தனர். அவர்களை நேற்று இரண்டாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நெட்டிக்கண்ட மற்றும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து இரண்டாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நெட்டிக்கண்ட கூறியதவது: இந்திராநகரைச் சேர்ந்த எம்.வசந்த் திருப்பதியில் உள்ள தனியார் ஷோரூமில் பணிபுரிந்து வருகிறார். தனது தாய் இறந்ததையடுத்து, 12ம் தேதி வேலைக்காக சித்தூருக்கு மோட்டார் சைக்கிளில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் வந்தார். இந்திராநகரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த பைக்கை மோதியுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது உறவினர்கள் தலையிட்டதால் வாக்குவாதம் முற்றியது. ஆனால், ஒரு கோஷ்டியை சேர்ந்த அருண்குமார், தனது மகன்கள் கிரீஷ், யஷ்வந்த் மற்றும் அவரது கடைத் தொழிலாளிகளான ஜெயராம், சிட்டிபாபு ஆகிய 4 பேருடன் சேர்ந்து இரவு 11.40 மணியளவில் சாந்தப்பேட்டை லில்லி பாலத்தில் வசந்தின் பைக்கை நிறுத்தி இரும்புக் குழாய்கள் மற்றும் விறகுகளால் தாக்கித் தாக்கினர் தலை, கை மற்றும் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. இதற்கிடையில், அருகில் இருந்தவர்கள், வசந்த் என்பவரை மீட்டு சிகிச்சைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வசந்த் கொடுத்த புகாரின்படி, நேற்று அருண்குமார், யஷ்வந்த், கிரீஷ், ஜெயராம், சிட்டிபாபு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்குப் பதிவுக்குப் பிறகு, இந்த வழக்கில் புகார்தாரரான எம்.வசந்த்தை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய சித்தூர் மாவட்ட எஸ் பி மணிகண்டா அவர்களின் உத்தரவின் பேரில் கைது செய்துள்ளோம். இந்திரா நகர் சித்தூர் நகரில் யாரேனும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தினால் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சித்தூரில் பைக் மோதிய தகராறு வாலிபரை தாக்கிய 4 பேர் கைது appeared first on Dinakaran.