அரியலூர், செப். 17: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில் வசிக்கும் சுமார் 1,200 க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று அங்குள்ள 3 ஆவது வார்டு மக்களுக்கு முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செந்துறை காவல் துறையினர், உரிய நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
The post பொன்பரப்பியில் சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல் appeared first on Dinakaran.