காரைக்கால்,செப்.17:நிரவியில் ரூ.5 லட்சம் செலவில் நீர் தேக்க தொட்டி மேம்பாட்டு பணிகள் நாக தியாகராஜன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெரு நீர் தேக்க தொட்டியின் பம்ப்ஹவுஸ் கான்கிரீட் மேல் தளம் மிகவும் சேதம் அடைந்துள்ளது.
எனவே கம்போஸ் கான்கிரீட் மேல் தளத்தை புதுப்பிக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இளமுருகன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நிரவியில் ரூ.5லட்சம் செலவில் நீர் தேக்க தொட்டி மேம்பாட்டு பணிகள் appeared first on Dinakaran.