கரூர், செப். 17: கம்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். கம்பு சாகுபடி குறித்து மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: கம்பி பயிரை பொறுத்தவரை கோ(சியு) 9, (80-85 வயது). ஐசி. எம்வி.221 (75-80 வயது). ஆடிப்பட்டம் (ஜூலை-ஆகஸ்ட்), புரட்டாசி பட்டம் (செப்டம்பர் -அக்டோபர்), தைப்பட்டம் (ஜனவரி-பிப்ரவரி). ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை இடவேண்டும். மேலும், அசோஸ்பைரில்லம் 200 கிராம் பிளஸ் பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் பிளஸ் 2 கிலோ விதை பிளஸ் தேவையான ஆறிய அரிசி கஞ்சி கலந்து உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.
45 செ.மீக்கு 15 செமீ இடைவெளியில் விதைக்க வேண்டும். இறவை பயிருக்கு 77 கிலோ யூரியா ஏக்கருக்கு, 112 கிலோ சூப்பர் ஏக்கருக்கு, பொட்டாஷ் 30 கிலோ ஏக்கருக்கு என்ற அடிப்படையிலும், மானாவாரி பயிருக்கு 34 கிலோ யூரியா ஏக்கருக்கு, 50 கிலோ சூப்பர் ஏக்கருக்கு, 30 கிலோ பொட்டாஷ் ஏக்கருக்கு என்ற அடிப்படையில் இட வேண்டும்.வயலில் நடவை பொறுத்தவரை, நுண்சத்து 5 கிலோ, ஏக்கருக்கு, 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, 20 கிலோ மக்கிய தொழு உரம் உரத்துடன் கலந்து இட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கம்பு சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை appeared first on Dinakaran.